நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 2019 குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக மேலாளர் திரு. தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. மு. கதிரேசன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் திரு. பி. கே. கைலாஷ்குமார், மூத்த வழக்கறிஞர் மற்றும் உறுதிமொழி ஆணையர் திரு. சி. முரளி, தன்னார்வ நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் திரு. ஆர். சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

.jpg)